ஒரே குழப்பமாக இருக்கிறது...
மேல்நிலைக் கல்வியில் எதைப் படிப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது என்று 10ம் வகுப்பு படிப்பை முடித்த மாணவர்களில் பலபேர் சொல்வதை கேட்டிருப்போம். இதில் நமக்கெல்லாம் பெரிதாக ஆச்சர்யம் எழுவதில்லை. சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு, தங்களின் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற வித்தை, 90% மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில், நமது சமூக சூழல் அப்படி இருக்கிறது. நாம், மாணவர்களை சுதந்திரமாக சிந்திக்க விடுவதில்லை மற்றும் தூண்டுவதில்லை. மேல்நிலைக் கல்விக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்தலென்பது, பாறைகளோடு மோதுவதல்ல என்பதை மாணவர்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை, தொடர்ச்சியான காலங்களில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிவரும் சூழலில், ஒரு மாணவர், ஒற்றை வழியிலேயே செல்வதைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கடினம். 10ம் வகுப்பு முடித்தவர்கள், முதலில் தங்களின் விருப்பம் எது என்பதை தெளிவாக ஆய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதற்கு வாய்ப்பு அதிகம் மற்றும் எதற்கு வாய்ப்பு குறைவு என்பதைப் பற்றி சிந்தித்து அறிய வேண்டும். ஒருவர், உயர்கல...