திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி முடித்த சுந்தரபாண்டியன்-1.
திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி முடித்த சுந்தரபாண்டியன்-1. முதலாம் சுந்தரபாண்டியன் திருவரங்கம் கோவிலில் பல கைங்கர்யங்களை செய்துள்ளனர். திருவரங்கம் கோயிலின் துலாபுருஷ மண்டபங்களும், சரஸ்வதி பண்டார நூலகமும் – “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்ற அருளப்பாடு திருவாராதனத்தில் வர காரணம்-திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் நடக்கும் மார்கழி திருவாய்மொழி திருநாள் (இராப்பத்து) முழுவதும் நம்பெருமாள் இங்கு எழுந்தருள்வார். இந்த ஆயிரங்கால் மண்டபத்தை கட்ட ஆரம்பித்தது ஹொய்சால அரசரின் தளபதி பெருமாள் தேவன். ஆனால் இதனை கட்டி முடித்தது சுந்தரபாண்டியன். இந்த மண்டபத்தின் பெயர் பெருமாள் தேவன் மண்டபம். (கட்டி முடித்த சுந்தர பாண்டியன் தான் பெயரை வைக்காமல் முதலில் கட்ட ஆரம்பித்த பெருமாள் தேவன் பெயரயே சூட்டினான்). ஆயிரங்கால் மண்டபத்தில் பின்பகுதி தூண்களுக்கும் முன்பகுதி தூண்களுக்கும் வித்தியாசங்களை காணலாம் ஆயிரங்கால் மண்டபத்தில் மொத்தம் 979 தூண்கள் தான் உள்ளன. அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மண்டபத்தின் முன்புறம் 21 தென்னை மரங்கள் நடப்படும். இந்த 2...