பாட்டிலை உலுக்கியது யார்?

20 கறுப்பு எறும்புகளையும், 20 சிவப்பு எறும்புகளையும் சேகரித்து அதனை ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அவைகளுக்கு ஒன்றும் ஆகாது. சண்டை போடாது. ஏதாவது உணவுத் துகள் கிடைக்கிறதா? என்று தேடிக்கொண்டிருக்கும். 

அந்த பாட்டிலை  எடுத்து மூன்று முறை பலமாக குலுக்கி  மீண்டும் மேஜையில் வைத்து விடுங்கள். இப்பொழுது எறும்புகள் ஒன்றை ஒன்று தாக்க ஆரம்பிக்கும். கறுப்பு எறும்புகள் சிவப்பு ஏறும்புகள் தான் தங்களை தாக்கின என நினைத்து சிவப்பு ஏறும்புகளை தாக்கத் தொடங்கும். சிவப்பு எறும்புகள் கறுப்பு எறும்புகள் தான் தங்களை தாக்கின என நினைத்து  கறுப்பு எறும்புகளை தாக்கத் தொடங்கும்.

கறுப்பு எறும்பு சிகப்பு ஏறும்பை எதிரியாக நினைக்கிறது. ஆனால் யார் உண்மையான எதிரி?. பாட்டிலை குலுக்கியவர் தான்.  இது போன்ற சண்டைகள் தினந்தோறும்  நமது சமூகத்திலும் நடந்து கொண்டே இருக்கிறது.

கணவன் -மனைவி
இடதுசாரி - வலதுசாரி
பணக்காரர் - ஏழை
நம்பிக்கை - அறிவியல்
என சமூகத்தில் மோதல்களுக்கான காரணம் தெரியாமல் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். 

நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்கு முன், நனக்கு  நாமே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
அந்த கேள்வி
”பாட்டிலை  குலுக்கியது யார்?”
 
பெரும்பாலான சண்டைகளுக்கு காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், அதற்கான அடிப்படை காரணம் அவர்களாக இருக்க மாட்டார்கள். பிறரால் தூண்டப்பட்டதாகவே இருக்கும். 

யார் உங்களை பிரிக்க முயல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாட்டிலை  உலுக்கியது யார்? என யோசிக்க ஆரம்பித்தாலே  பெரும்பாலான சண்டைகளை தவிர்க்கலாம். 

இது ஒரு எளிய சிந்தனை 🙂

Comments

Popular posts from this blog

ஒரே குழப்பமாக இருக்கிறது...

திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி முடித்த சுந்தரபாண்டியன்-1.