திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி முடித்த சுந்தரபாண்டியன்-1.
திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி முடித்த சுந்தரபாண்டியன்-1.
முதலாம் சுந்தரபாண்டியன் திருவரங்கம் கோவிலில் பல கைங்கர்யங்களை செய்துள்ளனர்.
திருவரங்கம் கோயிலின் துலாபுருஷ மண்டபங்களும், சரஸ்வதி பண்டார நூலகமும் – “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்ற அருளப்பாடு திருவாராதனத்தில் வர காரணம்-திருவரங்கத்தின் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் நடக்கும் மார்கழி திருவாய்மொழி திருநாள் (இராப்பத்து) முழுவதும் நம்பெருமாள் இங்கு எழுந்தருள்வார். இந்த ஆயிரங்கால் மண்டபத்தை கட்ட ஆரம்பித்தது ஹொய்சால அரசரின் தளபதி பெருமாள் தேவன். ஆனால் இதனை கட்டி முடித்தது சுந்தரபாண்டியன். இந்த மண்டபத்தின் பெயர் பெருமாள் தேவன் மண்டபம். (கட்டி முடித்த சுந்தர பாண்டியன் தான் பெயரை வைக்காமல் முதலில் கட்ட ஆரம்பித்த பெருமாள் தேவன் பெயரயே சூட்டினான்).
ஆயிரங்கால் மண்டபத்தில் பின்பகுதி தூண்களுக்கும் முன்பகுதி தூண்களுக்கும் வித்தியாசங்களை காணலாம்
ஆயிரங்கால் மண்டபத்தில் மொத்தம் 979 தூண்கள் தான் உள்ளன. அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மண்டபத்தின் முன்புறம் 21 தென்னை மரங்கள் நடப்படும். இந்த 21 தென்னை மரங்களும் லீலாவிபூதியை குறிக்கும். 979 தூண்கள் நித்யவிபூதியை குறிக்கும். இந்த காரணத்தால் திருநாள் நடந்த பின்னர் அந்த 21 தென்னை மரங்களை எடுத்து விடுவர்.
இதேபோல் கீழவாசல் தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தை கட்டி முடித்தவர் சுந்தரபாண்டியன். இந்த கோபுரத்தில் முதல் இரண்டு நிலைகள் ஹொய்சால அரசர்களால் கட்டப்பட்டவை.மேலே இருக்கும் பிற நிலைகளில் சுந்தரபாண்டியன் கட்டியவை.
இந்த கோபுரத்தில் இரண்டு அரசர்களின் சின்னங்களையும் காணலாம்
கண்டப்பேரண்ட பறவை கீழே (ஹொய்சள அரசர்களின் சின்னம்) மற்றும் இரண்டு மீன்கள் மேலே (பாண்டிய அரசர்களின் சின்னம்)
மற்ற கைங்கரியங்கள்:
பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும் ரத்னாங்கி
பெரிய பெருமாளுக்கு மாணிக்க அங்கி, வைர அங்கி
திருவனந்தாழ்வானுக்கு(ஆதிசேஷன்) ரத்னாங்கி
பெரிய பெருமாளுக்கு இரத்தின பாகை, மாணிக்க மாலை, கமலப்ராணம், கண்டமாலை தங்க செண்பகமாலை.
தங்க உத்தரியம்
தங்கத்தில் கோர்த்த முத்து கட்டிய ரத்னபிரபை சிம்ஹாசனம்
முத்து பந்தல் , ரத்தின பந்தல்
காயத்ரி மண்டபம் மற்றும் சந்தனு மண்டபங்களுக்கு தங்கத் தகடு வேய்ந்தது திருவணுக்கன் திருவாசல் கல் தோரணம் சந்தனு மண்டபத்தில் பெரிய திருவடி ஸ்வர்னத்தில் பிரதிஷ்டை (தற்போது இருக்கும் கருடன் கல் திருமேனி)
ஹேமசந்தன ஹரி ஸவர்னத்தில் பிரதிஷ்டை. (தற்போது சந்தனுமண்டபத்தில் இருக்கும் காலி அறை). இது தன்னுடைய விக்கிரகம். அதனை கோவிலில் பிரதிஷ்டை செய்ய மறுத்ததால் ‘ஹேம சந்தன ராஜா‘ என்று தயார் செய்த விக்ரஹத்தை ‘ஹேம சந்தன ஹரி‘ என பெயர் மாற்றி பிரதிஷ்டை.
சந்தனு மண்டபத்திற்கும் காயத்ரி மண்டபத்திற்கும் இடையே படி அமைத்து மேலே தளவரிசை போட்டது.
கிருஷ்ணர் சன்னதி திருவேங்கடமுடையான் படத்திற்கும் இடையே உள்ள கல்லறையில் சேரகுலவல்லி நாச்சியார் தங்க விக்கிரகம் பிரதிஷ்டை. (தற்போது அர்ஜுன மண்டபத்திற்கு பின்னால் இருக்கும் தாயார் பிற்காலத்தில் புதிதாக எழுந்தருளப்பட்டவர்).
ராஜமகேந்திரன் திருவீதி மதில் தூண்கள் முதலானவைகளுக்கு பொன் தகடு.
குலசேகரன் திருவீதியையும் பொன் செய்வித்தது.
த்வஜஸ்கம்பம் (கொடிமரம்) தங்கத்தில் நாட்டியது. படையெடுப்பு முடிந்து 1461 ஆம் ஆண்டு மீண்டும் செம்பு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் 112 தங்கத்தகடுகள் போடப்பட்டன. 2002 ஆம் ஆண்டு இந்தக் கொடிமரம் தகடுகளின் எண்ணிக்கை சரியாக 112 ஆக இருந்தது.
அழகிய மணவாளன் திருநாள் கொடியேற்றம் எழுந்தருள தங்கத்தால் ஒரு தேர் செய்தது. இந்த தங்கத்தேர் பால் கிணற்றுக்கும் அனுமாருக்கும் இடையே தற்போது இருக்கும் மண்டபத்தில் இருந்தது.
தங்கத்தில் தெப்பம்.
தங்கத்தின் கொப்பரைகளும் வட்டில் வேதிகைகள் தங்கத்தில் செய்தது.
மொத்தம் 18 லட்சம் பொன் கோவில் மேய்த்து எம்மண்டலங்கொண்டு கோவில் பொன் மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டியத்தேவர் கைங்கரியம்.
மொத்த கோவிலையும் தங்கத்தில் மின்ன வைத்ததாலேயோ படையெடுப்பு நடைபெற காரணமோ என தோன்றுகிறது.
சுந்தர பாண்டியன் முதன்மையான கைங்கர்யபரன். அதனால்தான் அவர் சம்பர்ப்பித்த பாண்டியன் கொண்டையை பெரிய பெருமாள் சொப்பனத்தில் வேங்கடாத்ரி ஸ்வாமிகள் அருளி, அதை சரி செய்தார்.
Comments
Post a Comment